நாடு கடத்தப்பட்ட நிலான் ரொமேஷ் சமரசிங்க விளக்கமறியலில்…

(FASTNEWS | COLOMBO) – துபாயில் கைதாகி நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷின் உறவினரான நிலான் ரொமேஷ் சமரசிங்கவை எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர் நேற்று(17) இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.