(FASTNEWS|COLOMBO) – சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று(16) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.-869 ரக விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி சீனாவிற்கு சென்றிருந்தார்.
குறித்த மாநாட்டின்போது சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் மற்றும் சீன பிரதமர் லீ குவாங்க் உள்ளிட்டோரை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நிலவும் அசாதாரண சூழலின் மத்தியில் பாதுகாப்புப் பிரிவினரின் நடவடிக்கைககளுக்காக 260 கோடி ரூபா நன்கொடையை சீனா வழங்கியுள்ளது.