நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று(13) நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.