நாடு பூராகவும் மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்….

மின்சார சபையின் பணியாளர்கள் இன்று(18) காலை 9 மணி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

மின்சார சபைத் தலைவரை மின்சார சபைப் பணியாளர்கள், அவரது அலுவலகத்தில் வைத்து சிறைப்பிடித்து நேற்று(17) போராட்டம் நடத்தி இருந்தனர்.

இதன்படி, காவற்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மின்சார சபைத் தலைவரை மீட்டனர். இதன்போது ஏற்பட்ட பதட்ட சூழ்நிலையில் தாங்கள் தாக்கப்பட்டதாக மின்சார சபையின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் காயமடைந்த ஐந்து பணியாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளதாக, மின்சார பணியாளர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

முதலாம் இணைப்பு

மின்சார சபை ஊழியர்கள் சபையின் தலைமையகத்தை சுற்றிவளைக்க தீர்மானம் – சபைத் தொழிற்சங்கம்..

 

#reeshma