நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு டிஜிற்றல் பொருளாதாரத்தை முன்னெடுக்கப்படுவதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று(25) காலிமுகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் முதல் தடவையாக Wi-Fi பனல் கருவிகளை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று(25)காலிமுகத்திடலில் இடம்பெற்றது.
இதற்காக நாடு முழுவதிலும் Wi-Fi வலயங்களை ஸ்தாபிக்கப் போவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும் உரையாற்றுகையில் பாடசாலைகளிலும் பிரத்தியேக Wi-Fi வலைப்பின்னல்களை உருவாக்கி மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று கூறினார்.