நாடு முழுவதும் சீரான காலநிலை…

நாடு முழுவதும் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சூரியனின் தெற்கு நோக்கிய தற்காலிக தொடர்பான இயக்கம் காரணமாக செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது.

இன்று நண்பகல் 12.09 அளவில் ஆடியம்பலம, நாரன்கொட, கெவிலிப்பிட்டிய, கரமெட்டிய, ரதலியகொட, நில்கல மற்றும் பனங்காடு ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.