(FASTNEWS | COLOMBO) – நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அடுத்த சில நாட்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சிறிதளவான சாத்தியம் காணப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்டத்தில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.