பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார கைது செய்ய விடாமல் தடுப்பது அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவே என ஆசாத் சாலி பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.
சிறுபான்மை இனத்தவரின் வழக்கிற்கு அமைய ஞானசார தேரரை நீதிமன்றம் அழைக்கவில்லை மாறாக ஹோமாகமை நீதிமன்ற அவமதிப்பு, எக்னெளிகொடவின் வழக்கின் போது சந்தியா எக்னெளிகொடவினை தூற்றியமை குறித்த வழக்கே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
விஜயதாச என்பவர் ஐ தே கவின் முக்கிய உறுப்பினர். நாட்டின் நீதி அமைச்சர். அப்படிப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்வதிலிருந்து தடுக்கின்றார் என்பது உண்மை என்றால் அது இந்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் என தெரிவித்த அசாத் சாலி, கடந்த அரசினை கவிழ்த்ததும் இவ்வாறான சிறுபான்மைத் தாக்குதல் தான் என அரசுக்கு நினைவூட்டியிருந்தார்.
இதன் உண்மை நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என பல பொதுநலக் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.