நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை…

(FASTNEWS|COLOMBO) நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் நாட்டின் கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும், இரத்தினபுரி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு தென்மேற்காக உள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.