நாடு முழுவதும் மின்துண்டிப்பு தொடர்பில் சூத்திரம் நடைமுறைக்கு – அதுவரையிலும் பல மணி நேர மின் வெட்டு அமுலுக்கு..

(FASTNEWS | COLOMBO) – நிலவும் மின்சார உற்பத்தி சர்ச்சை காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தும் பகுதிகளை / வலயங்கள் தொடர்பில் அட்டவணை ஒன்றினை நடைமுறைப்படுத்த மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தினமும் பிரதேசங்கள் ரீதியாக பல மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார உற்பத்திக்கு போதியளவு நீர் இல்லாமை மற்றும் நுரைச்சோலையின் இரண்டாம் மின்சார ஜெனரேடர் பழுதாகியமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.