நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான காலநிலை…

(FASTNEWS|COLOMBO) – கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் வவுனியா பொலன்னறுவை முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் உயர்வான வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

வழமையான வெப்பநிலையிலும் விட உடலின் வெப்பம் அதிகரிக்க கூடும் என்பதினால் தண்ணீரை கூடுதலாக அருந்துமாறும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது,