நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று(28) பி.ப.2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேற்கு , மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்று திணைக்களம் இன்று(28) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.