நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தணியக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு சப்ரகமுவ , வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.