(FASTNEWS|COLOMBO) நாட்டின் சில பிரதேசங்களில் இன்று(04) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சில இடங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.