நாட்டின் தேசிய உற்பத்தியில் அதிகரிப்பு – கபீர்..

நாட்டின் தேசிய உற்பத்தியின் பெறுமதி 2015ம் ஆண்டிலும் பார்க்க 2016ம் ஆண்டில் 478 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருப்பதாக அரச தொழில் துறை அபிவிருத்தி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டின் தேசிய உற்பத்தியின் பெறுமதி 10 ஆயிரத்து 361 பில்லியன் ரூபாவாகும். 2016ம் ஆண்டில் இத் தொகை 11 ஆயிரத்து 839 பில்லியன் ரூபாவாக அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2015ம் ஆண்டில் 5 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 2016ம் ஆண்டில் 4.4 சதவீதமாக குறைவடைந்தது. இருப்பினும் இந்த வருடத்தில் தேசிய உற்பத்தியின் பெறுமதி 2015ம் ஆண்டிலும் பார்க்க அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி வேகம் என்ற ஒரு சுட்டெண்ணை மாத்திரம் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதாக சிலர் முன்னெடுக்கும் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் அமைச்சர் கபீர் ஹசிம் கூறினார்.

சுதந்திரம் கிடைத்த பின்னர் பதிவு செய்யப்பட்ட கடன்சுமை மற்றும் உலக பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் முன்னெடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள சிறப்பான பொருளாதாரக் கொள்கை வெற்றியளித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு சேவைத்துறையின் மூலம் கிடைத்த பங்களிப்பு 2016ம் ஆண்டில் 56.5 வீதமாகும். இத்தொகை 2016ம் ஆண்டிலும் பார்க்க 4.2 வீத வளர்ச்சியாகும் என்றும் அவர் கூறினார்.

இதே போன்று 2016ம் ஆண்டில் நாட்டின் வேலையற்றோரின் எண்ணிக்கை 2015ம் ஆண்டிலும் பார்க்க புதிய தொழில் வாய்ப்புக்கள் 1இலட்சத்து 20 ஆயிரத்தால் ஏற்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு தற்போதைய அரசாங்க காலப்பகுதியில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட தொழில்வாய்ப்புக்களாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் 15 முதல் 24 வயதிற்கிடைப்பட்ட வயதினருக்கு மத்தியில் வேலையற்றோர் பிரச்சினை நீலப்படையணியினாலேயே உருவாக்கப்பட்டது.

நீலப்படையணியின் கீழ் இருந்த இளைஞர்களை அப்போதைய ஆட்சியாளர்கள் தமது அரசியல் நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தினர். இந்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு அப்போது நடவடிக்கைகள் ஏதும் செய்யவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

(rizmira)