நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை…

வடக்கு வடமத்திய கிழக்கு தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை அல்லது இடியுடன் கூடிய மழை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு சப்ரகமுவ தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி காணம்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மொனறாகலை மாத்தறை மாவட்டங்களிலும் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.