நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடும் மழை…

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று(02) கடும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில பகுதிகளில் 75mm அளவில் மழை பெய்யலாம் என குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடை மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.