நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2.00 மணி முதல் 100 மி.மீ. இற்கும் அதிகமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, நாட்டின் மேல், வடமேல் மற்றும் தென்பகுதியின் கடலோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்றையதினம் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.