நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும்(11) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் குறிப்பாக சப்ரகமுவ, தெற்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மணிக்கு சுமார் 75ml மழை பெய்யக் கூடும் எனவும், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகத்துடன் காணப்படும் என்று திணைக்களம் இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும். பொதுமக்கள் இடி மின்னலிலிருந்து அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் மேலும் கோரியுள்ளது.
(rizmira)