நாட்டின் பல பகுதிகளில் இன்று(01) இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் தென் கடற்கரை பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த நிலையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.