நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக இன்றும்(27) நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக, மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.