நாட்டின் பல பகுதிகளில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன அலுவலகங்கள் திறப்பு…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் தற்போதைய நிலையில், வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் நோக்கில், வௌிநாட்டிற்கு செல்லும் பயணிகளுக்குத் தகவல்களை வழங்குவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 24 மணித்தியாலங்களும் செயற்படும் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, கம்பஹா, வென்னப்புவ, குருணாகல், மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் குறித்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது..

இந்த அலுவலகங்களின் ஊடாக விமான டிக்கட்டுக்களை பெற்றுக்கொள்தல், பயண நாட்களை மாற்றம் செய்தல், இருக்கையை முற்பதிவு செய்தல், பயண நேரம் உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக தகவல்களை 1979 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இதனைத்தவிர www.srilankan.com எனும் இணையத்தளத்திற்கு பிரவேசித்தும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.