நாட்டின் பல பாகங்களிலும் இன்று(05) இரவு வேளைகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டல அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது சில நேரம் சற்று அதிகரித்து வீசக் கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிகளில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டல அவதான நிலையம் கோரியுள்ளது.