நாட்டின் பல பாகங்களிலும் மழை – 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என அந்நிலையம் குறிப்பட்டுள்ளது.

அதேவேளை,காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கொழும்பு வரையான கடற்பகுதிகளின் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை –புளத்சிங்ஹல ஹல்வத்துறை கந்த பகுதியில் மண்சரிவு அபாயச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஹல்வத்துறை கந்த பகுதியை அண்மித்த பகுதிகளிலுள்ள 15 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.