நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவில் கடும் மழை

நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவான கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.