நாட்டின் பல பாகங்களில் மழை….

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய , சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மாத்தறை பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலைவேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடற்கரையோரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், மன்னாரிலிருந்து புத்தளம் கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரையோரங்களின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.