நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
கிழக்கு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் என தெரிவித்துள்ளது.
மேல் மாகாணம் மற்றும் காலி , மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் எனவும் ஏனைய பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(16) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை அம்பாறை மாவட்டத்திலும் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு மேலாக காற்று வீசக்கூடும்.
மேலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையிலான கடங்கரையோரபகுதிகளில் ஓரளவு மழைபெய்யக் கூடும் எனவும், கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்கரையோரத்தின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய கடற்கரையோரபகுதிகளில் சீரான காலநிலை நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.