நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குள் இன்றிலிருந்து படிப்படியாக குறையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில ;பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கிழக்கு முதல் வட கிழக்கு வரையான திசைகளில் இருந்து மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.