நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(08) மாலை வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை பொழுது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மேல், சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், சபரகமுவ மற்றும் மத்திய மாகாண சில பிரதேசங்களில் மூடுபனி காணப்பட கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.