நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் , புத்தளம் மற்றும் மன்னார் ;மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யலாம் என திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது

மேலும், மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன் அம்பாறை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.