நாட்டின் பல பிரதேசங்களில் இரவு இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(11) இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என குறித்த திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

(rizmira)