மத்திய , வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஒரளவு மழைபெய்யும் எனவும் புத்தளத்திலிருந்து கொழும்பு ,காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் ஓரளவு மழைபெய்யும் என்றும் திணைக்களம் இன்று(19) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.