நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும்(29) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மழை பெய்யும் போது நாட்டை சுழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 80 கிலோ மீட்டருக்கும் அதிகமாக காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.