நாட்டின் பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை..

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு சப்ரகமுவ மத்திய மற்றம் தென் மாகாணங்களில் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு , காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரையோரங்களின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் ஹம்பாந்தோட்டை , மாதுறுஓயா மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களில் 40 தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.