நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை….

நாட்டின் ஊடாக வடகிழக்கு பருவமழை நிலைகொண்டுள்ள காரணத்தால் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த நிலையம் வௌியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு , ஊவா , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்கள் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வடமேல் , மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.