நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டத்தின்; சில இடங்களிலும் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவ ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும் இரத்தினபுரி, களுத்துறை ,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடபகுதி மற்றம் ஹம்பாந்தோட்டை மொனறாகலை மாவட்டங்களில் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் ஆழமான மேற்குகடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(27) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.