நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

(FASTNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எத்ரிவு கூறியுள்ளது.

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும், பதுளை, அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.