தென்கிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை நாட்டின் ஊடாக நிலைகொண்டுள்ளதால் மழை மற்றும் இடியுடன் கூடிய காலநிலை அதிகரிப்பு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.