நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக ஏப்ரல் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று(08) ஜா எல, கனேமுல்லை, அங்குருவெல்ல, தம்பகொல்ல, அம்பன்போருவ மற்றும் கொட்டகொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.