(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளைய தினமும்(11) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்பதால் அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை, யாழ்ப்பாணம், நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பான நிலையை விட 03 செல்சியஸ் அதிகரித்துள்ளது.
கொழும்பு, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சாதாரண நிலையை விட 02 செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது