நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டில் சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் அடிக்கடி கடும் காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் வடக்கு , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று(16) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது இந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசுக்கூடும் எனவும் மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் காலைவேளைகளில் பனிமூட்டம் நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.