நாட்டின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டுக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக கடற்பரப்புகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.