தாழமுக்க நிலையானது அடுத்த 48 மணித்தியாலங்களில் விருத்தியடையும் சாத்தியம்…

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வடக்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், அனுராதபுரம், மட்டக்களப்பு , கொழும்பு , காலி, யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய நகரங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்வு கூறியுள்ளது.