நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை…

கிழக்கு மாகாணம் மற்றும் யாழ் மாவட்டம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பெரும்பாலான பிரதேசங்களில் இன்று(17) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த திணைக்களம் இன்று(17) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.