(FASTNEWSCOLOMBO)நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.