நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலைவேளையில் மழை பெய்யும் எனவும், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சுமார் 100மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதுடன், இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.