நாட்டின் பொரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பொரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப்பகுதிகளின் பல இடங்களில் காலைவேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலைவேளையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் இன்று(21) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.