நாட்டிற்கு எடுத்துவரப்பட்ட கழிவுப் பொருட்கள் தொடர்பில் விசாரணை

(FASTNEWS|COLOMBO) – கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன் தொடர்பில் தொடர்ந்தும் சுங்கப்பிரிவு விசாரணை நடத்தி வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்கலனை நாட்டிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுத்த தரப்புகளுக்கு எதிராக தராதரம் பார்க்காது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

2013ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இந்தக் கழிவுப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட கழிவுப் பொருட்கள் தொடர்பில் நாளை அனைத்துத் தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக பொருளாதார அலுவல்கள் தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.