(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் 77ஆவது மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிகழ்வில், சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக நியமித்து யோசனை நிறைவேற்றப்பட்டது.
ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக நியமித்து யோசனை முன்வைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அரங்கத்திற்கு செல்லும் போது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் பாரியார் ஹேமா பிரேமதாஸவை அழைத்து சென்றமை அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாஸ முன்மொழியப்பட்ட பின்னர் ஏகமனதாக சபையில் அங்கீகாரமும் வழங்கப்பட்டது.
பின்னர், மேடையில் இருந்து இறங்கிய ஹேமா பிரேமதாஸ தனது மகனை கண்ணீர் மல்க கட்டி தழுவினார். இந்நிகழ்வு பார்பவர்களின் உள்ளத்தை கலங்கடித்தது.
நாட்டிற்கே தலைவனானாலும் எனக்கு நீ மகன்தான் என்பது போல் இருந்ததுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம் மாநாடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.