நாட்டிற்கே முதலிடம் – மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இம்முறை பங்களிப்பினை வழங்க முடியவில்லை – லசித் மாலிங்க…

(FASTNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவுள்ளமையினால் இம்முறை ஐ.பி.எல் இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரின் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கையின் இறுதிக் குழாமினை தெரிவு செய்வதற்காக சுப்பர் லீக் ஒருநாள் தொடரை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த தொடர் எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகி 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தொடரில் 04 அணிகள் மோதுவதுடன், காலி அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்படுகிறார்.

இதனால் கடந்த வருடங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராகக் திகழ்ந்த மாலிங்கவினால் இந்த முறை தமது பங்களிப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அறிவித்துள்ள லசித் மாலிங்க, தனக்கு பதிலாக மாற்று வீரரை தெரிவு செய்வது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.